ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற குடிமை பணிகளுக்கான முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு AICSCமையம் நடத்தும் முதன்மை தேர்வுக்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஜூன் 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் ஜூன் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய civilservicecoaching என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.