தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். இவர் தற்போது “தக் லைஃப்” என்ற திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிம்பு ஆகியோர் நடித்து வருகிறார்கள். அதன் பிறகு திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ஜிங்குச்சா மற்றும் ஷூகர் பேபி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கொச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது “நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். எனக்கு ஓய்வு என்றால் அது நான் இறந்த பிறகு தான். என் உயிர் இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே இருப்பேன்” என்று கூறினார்.

மேலும் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் வயதானாலும் நடிப்பு  மீதான அவரது ஆர்வம் குறையவில்லை என பலரும் கூறி வருகிறார்கள்.