பிரபல சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் அவருடைய கணவரும் நடிகருமான அர்னவ் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் நடிகர் அர்னவ் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீனில் வெளி வந்தார். திவ்யா ஸ்ரீதருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தன்னுடைய மகளை பார்க்க வேண்டும் என ஆசையாக இருப்பதாக அர்னவ் அடிக்கடி பேட்டிகள் மற்றும் டிவி ஷோக்கலில் கூறி வருகிறார்.

இதனால் ரசிகர்கள் பலரும் ஈகோவை விட்டுவிட்டு உங்கள் மகளை சென்று பாருங்கள் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் அர்னவ் திவ்யா என்னுடைய குடும்பம் நாசமாக வேண்டும் எனக் கூறி மண்ணை வாரி வீசினார். இதனால் நான் அவரிடம் சென்று குழந்தையை காண்பிக்கும்படி கேட்க மாட்டேன் என கூறியுள்ளார்