செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2021 உள்ளாட்சி தேர்தல் நடக்கும்போது…  நானும்.. எங்க கழக தோழர்கள் எல்லாம் உள்ளே போயிட்டு வந்தோம். அதற்காக பிரஸ்ஸை மீட் பண்ணாம இருக்கோமா ?  இல்ல திமுக கிழிகிழின்னு கிழிக்கமா இருக்கோம்மா….

டெய்லி கிழிக்கிறோம். டெய்லி கிழ்ச்சிட்டு இருக்கின்றோம். அப்படி கிழிக்க வேண்டிய அளவிற்கு தமிழ்நாட்டுல  அவல நிலை இருந்துட்டு  இருக்கு.  அதனால எது எப்படி இருந்தாலும் சரி,  ஒரு ITவிங்கா  இருந்தாலும் சரி, பத்திரிக்கை துறையா இருந்தாலும் சரி,  அரசியல் தலைவராக  இருந்தாலும் சரி,  ஒரு பழிவாங்கும் என்னத்தோடு தான் இந்த அரசாங்கத்தை பொருத்தவரை பண்ணிக்கிட்டு இருக்கு. இதே ரெண்டு வருஷம் இந்த கவர்மெண்ட் இருந்து இல்லையா ?

இந்த விடியாத அரசு ஆட்சிக்கு வந்து ரெண்டு வருஷம் ஆகிடுச்சு…  அப்போ  சீமான் மேல நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது தானே.. ஏன் இப்போ மட்டும் எடுக்குறீங்க.கடுமையான விமர்சனம் பண்ணும்போது உடனே பழிவாங்கல் என்ற இந்த ஆயுதம். வழக்கு என்ற ஆயுதம். அது மழுங்கி போன ஆயுதம். அந்த ஆயுதத்தால் ஒன்னும் செய்ய முடியாது என தெரிவித்தார்.