
விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், எம்ஜிஆர் உயிரோடு இருக்கின்ற போது எனக்கு பிறகு இவர்தான் இந்த கட்சிக்கு தலைவராக வரவேண்டும் என்று யாரையும் அடையாளம் காட்டவில்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு தொண்டர்கள் ஏற்றுக் கொண்ட தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்… அதே போன்று அம்மா உயிரோடு இருக்கின்ற வரை எனக்குப் பிறகு இவர்தான் இந்த கட்சியை வழிநடத்த வேண்டும், இந்த ஆட்சியை நடத்த வேண்டும் என்று சொல்லி யாரையும் அடையாளம் காட்டவில்லை.
ஏனென்றால் ? இது தொண்டர்களின் உணர்வு உடைய கட்சி. தொண்டர்களே அவர்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள தகுதியுள்ள கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அம்மாவின் மறைவிற்குப் பிறகு இன்றைக்கு 2 கோடி தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்றைக்கு இயக்கத்தினுடைய பொதுச் செயலாளர்…
அம்மாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தை நான்கரை ஆண்டு காலம் சிறந்த ஒரு முதலமைச்சராக… ஏழைகளின் உடைய முதலமைச்சராக… ஏழைகளின் உடைய துன்பங்களை தெரிந்து அதற்கு உழைத்த ஒரே முதலமைச்சர். இந்த கட்சி நான் பொதுச் செயலாளராக வருவேன், முதலமைச்சராக வருவேன் என எடப்பாடி பழனிச்சாமி நினைச்சாரா ? என தெரிவித்தார்.