தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகிய நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் பிரபல தனியார் கல்லூரியில் நடந்தது. அப்போது பேசிய தனுஷ் வாத்தி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து தெரிவித்திருக்கின்றார்.
அவர் கூறியதாவது, கொரோனா லாக்டவுன் நேரத்தில் இந்த திரைப்படத்தின் கதையை வெங்கி தெரிவித்தார். நான் வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்தேன். கதையைக் கேட்டு விட்டு ஏதாவது காரணம் சொல்லி விடலாம் என இருந்தேன். ஆனால் படத்தின் கதை எனக்கு ரொம்ப பிடிச்சு போனதால் படத்தில் நடிக்க உடனே நான் ஓகே சொல்லிவிட்டேன் என தெரிவித்திருக்கின்றார்.