தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சென்ற வருடம் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். நான்கு வருடம் இருவரும் இணைந்து வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் திடீரென விவாகரத்தை அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சடைய செய்தது.

இதன்பின் இருவரும் இணைவார்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இருவரும் பழைய நிலைமைக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் தற்போது பல திரைப்படங்களில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சமந்தாவை படத்தில் காண்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் தனது முன்னாள் கணவரான நாக சைதன்யாவின் தம்பியும் சமந்தாவின் மைத்துனருமான நடிகர் அகில் புதிதாக திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கின்றார்.

அதற்கு சமந்தா வாழ்த்து தெரிவித்திருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளார்கள். நடிகர் அகில் நடித்துள்ள திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு ஏஜென்ட் என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் அகிலுக்கு சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார்.