குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. இவரின் கணவர் சென்ற வருடம் காலமானார். அவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீனா கணவரின் மறைவிற்குப் பின்னர் அவருக்கு உறுதுணையாக கலா மாஸ்டர் இருக்கின்றார். கணவரின் இறப்பு துயரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் மீனாவை சந்தோஷப்படுத்துவதற்காக கலா மாஸ்டர் ஒரு விஷயம் செய்திருக்கின்றார்.

40 வருடம் நிறைவு பெற்ற நிலையில் “மீனா 40′ என கலா மாஸ்டர் நிகழ்ச்சி ஒன்றை நடத்த முடிவு செய்திருக்கின்றாராம். மீனா 1982 ஆம் வருடம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சென்ற 2022 ஆம் வருடத்தோடு 40 வருடத் திரை பயணத்தை நிறைவு செய்திருப்பதால் அவருக்கு கலா மாஸ்டர் விழா நடத்த முடிவு செய்திருக்கின்றாராம். மேலும் அந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.