
சமூக வலைதளங்களில் தற்போது வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், 6 இளைஞர்கள் ஒரு மலைக் உச்சியின் விளிம்பில் நின்று காற்றை அனுபவித்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் திடீரென “ஒரு சோதனை” செய்ய முடிவு செய்கிறார். அவர் அருகிலிருந்து சில குச்சிகளை எடுத்து மலையிலிருந்து கீழே வீசுகிறார். அவை நேரடியாக கீழே விழும் என எதிர்பார்த்தார்.
ஆனால் நடந்ததது எல்லாம் எதிர்பாராதது. குச்சிகள் கீழே விழுவதற்கு பதிலாக, காற்றில் மிதந்து மாறுபட்ட திசையில் சுழன்று, அந்த இளைஞரின் தலையில் நேராக வந்த விழுந்தது. இது சுற்றிலும் நின்ற நண்பர்களையே மட்டுமல்ல, இணையதள பயனர்களையும் பெரிதும் சிரிக்க வைத்துள்ளது.
Gm….one word
Genius Boy pic.twitter.com/NcHJ6NFZur— Science And Nature (@InterestingSci1) June 1, 2025
வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சமூக ஊடகங்களில் இது குறித்து நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒருவர் “நேச்சர் அவனுக்கு reverse UNO card கொடுத்துச்சு” எனவும், மற்றொருவர் “நியூட்டனின் விதிகளும் இதுக்கு பதில் சொல்ல முடியாது போல” எனவும் நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளனர்.
சிலர் இதற்கு மலைகாற்றின் எழுச்சி சக்தி (updraft) காரணம் என அறிவியல் விளக்கமளித்தாலும், பெரும்பாலானோர் “இது கர்மாவும் கலந்த காமெடியும்!” என ரசித்து வருகின்றனர்.
அந்த வீடியோ 20 வினாடிகள் மட்டுமே உள்ள நிலையில், அதிர்ச்சி, சிரிப்பு, இயற்கையின் சக்தி என எல்லாவற்றையும் ஒரே கிளிப்பில் வழங்கி, “வாரத்தின் மிக வேடிக்கையான வைரல் வீடியோ” என்ற பட்டத்தை வென்றுவிட்டது.