தன் காதலிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில், காதலி முதல் துண்டு கேக்கை தனது நெருங்கிய நண்பருக்கு ஊட்டியதால் ஆத்திரமடைந்த காதலன் அங்கிருந்த அலங்காரங்களை அடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by TV1 INDIA खबरों का नया अड्डा* (@tv1indialive)

பலூன்கள் மற்றும் வண்ண விளக்குகளுடன் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விழாவில், கேக் வெட்டிய பெண், அருகே நின்றிருந்த தனது ஆண் நண்பருக்கு முதலில் கேக் ஊட்டியது அங்கிருந்த காதலனுக்குப் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விருந்தினர்கள் முன்னிலையிலேயே அங்கிருந்த அலங்காரப் பொருட்களைத் தூக்கி எறிந்தும், தட்டிவிட்டும் அவர் ரகளையில் ஈடுபட்டார்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து, அந்த இளைஞரின் முதிர்ச்சியற்ற செயலையும், எல்லை மீறிய ஆதிக்க உணர்வையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருவதுடன், இது ஆரோக்கியமான உறவுக்கு அழகல்ல என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.