மும்பை மகாலட்சுமி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெலிகாலராகப் பணியாற்றிய 19 வயது இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அர்ஷத் சித்திக் என்ற 25 வயது இளைஞரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அர்ஷத் அதே நிறுவனத்தில் முன்பு பணியாற்றியபோது, அங்கிருந்த அலுவலக வாட்ஸ்அப் குரூப் மூலம் நான்கு ஹிந்து பெண்களின் அலைபேசி எண்களைத் திருடி, அவர்களுக்குத் தொடர்ந்து ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பித் துன்புறுத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “அர்ஷத் தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிப் பார்க்கச் சொன்னதோடு, நான் உன்னைத் திருமணம் செய்துகொண்டால் மதம் மாறச் சொல்ல மாட்டேன், கையில் காப்பு கட்டவோ அல்லது கோயிலுக்குச் செல்லவோ தடை விதிக்க மாட்டேன் என்று மெசேஜ் செய்தார்.

மேலும் தனக்கு ஏற்கனவே பல ஹிந்து காதலிகள் இருந்ததாகக் கூறி மத ரீதியிலான கருத்துக்களைப் பதிவிட்டார்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். அந்தப் பெண் தனது தந்தையிடம் இதுகுறித்துக் கூற, அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அர்ஷத்தை மடக்கிப் பிடித்தனர். கைதான அர்ஷத் சித்திக் ஒரு உள்ளூர் அரசியல் பிரமுகரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.