
கனடாவில் சமீப காலமாக மாநில மொழி கன்னடத்திற்கும், இந்தி மொழிக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் எஸ்பிஐ வங்கியில் மொழி பிரச்சனை வெடித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவர் கன்னடத்தில் பேசியுள்ளார். அதற்கு அந்த கிளை மேலாளர் ஹிந்தியில் பதில் கொடுத்துள்ளார்.
ಇದನ್ನ ಕ್ಷಮೆ ಕೇಳೋದು ಅಂತಾರ..?
ಹಲ್ಲು ಕಿಸ್ಕೊಂಡು ಬೇಕಾಬಿಟ್ಟಿ ಕಾಟಾಚಾರಕ್ಕೆ ಕೇಳುವ ಈ ಕ್ಷಮೆ ನಮಗೆ ಬೇಕಾಗಿಲ್ಲಾ..😡
ಈಕೆಗೆ ಈಕೆಯ ದುರಹಂಕಾರದ ಮಾತಿನ ಬಗ್ಗೆ ಪಶ್ಚತ್ತಾಪ ಕಾಣ್ತಿಲ್ಲ ಆಗಿರೋ ದುರಂತದ ಬಗ್ಗೆ ಅರಿವೇ ಇಲ್ಲಾ..@TheOfficialSBI ಕ್ಷಮೆ ನಿಮ್ಮ ಅಧಿಕೃತ ಪುಟದಿಂದ ಬರಬೇಕು ಹಾಗೂ ಈಕೆಯನ್ನು ಕೆಲಸದಿಂದ ವಜಾ ಮಾಡಬೇಕು..✊😡 https://t.co/eytTSUmRMR pic.twitter.com/pkZJ4rkLQO
— ಚೇತನ್ ಸೂರ್ಯ ಎಸ್ – Chethan Surya S (@Chethan_Surya_S) May 21, 2025
அப்போது அந்த வாடிக்கையாளர் இது கர்நாடகா நீங்கள் எங்கள் மொழியில் தான் பேச வேண்டும் என்று கூற, அதற்கு அந்த வங்கி மேலாளர் நான் ஒருபோதும் கன்னடத்தில் பேசமாட்டேன் ஹிந்தியில் தான் பேசுவேன் என்று கூறி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் சிதராமையா இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அந்த பெண் வங்கி மேலாளர் கன்னட மொழியில் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.