சீன நாட்டில் ஜாங் (27) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் லேசான் ராட்சச புத்தர் கோவிலுக்கு சென்றுள்ளார். இவர் புத்தரிடம் தன்னுடைய ஆசைகளை ஹெட்செட் வடிவிலான ஒரு ஸ்பீக்கர் மூலம் கூறியுள்ளார். அவர் புத்தருக்கு கேட்க வேண்டும் என்பதற்காக ஸ்பீக்கர் மூலம் ஊருக்கே கேட்கும் அளவுக்கு சத்தமாக தன் ஆசைகளை பட்டியலிட்டுள்ளார். அதாவது 27 வயது ஆகும் தனக்கு சொந்தமாக கார், வீடு எதுவும் இல்லை. எனக்கு காதலியும் இல்லை. எனக்கு 10 மில்லியன் யுவான் மட்டும் இருந்தால் போதும். (10 மில்லியன் யுவான் என்பது இந்திய மதிப்பில் 11.81 கோடி ரூபாய் ஆகும்).

எனக்கு மென்மையான மற்றும் இனிமையான காதலி வேண்டும். என்னுடைய காதலி என்னிடம் இருக்கும் பணத்தை விட என்னை தான் அதிகமாக நேசிக்க வேண்டும் என்று வேண்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் உங்கள் ஆசை கண்டிப்பாக நிறைவேறும் என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் சிலர் உங்களை நம்பாமல் புத்தரை நம்பி இப்படி ஆசைகளை கேட்பதா என விமர்சனமும் செய்து வருகிறார்கள்.