செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, என்னை பொருத்தவரைக்கும் எந்த பகுதியில் வாழும் மக்கள்  இருந்தாலும் நமக்கு சமமாக உட்கார்ந்து பேசக்கூடிய…..  நமக்கு சமமா இந்த வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எல்லா உரிமையும் இருக்கு…..   அவங்களுக்கு குறிப்பிட்ட ஒரு ஏரியாவுல இல்லை…. இந்த இடத்தில் வந்தவர்கள் கொஞ்சம் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்வதற்கு நான் விரும்பவில்லை.

நான் எந்த காரணத்திற்காகவும் அந்த அர்த்தத்துல சொல்லவில்லை…   அந்த அர்த்தத்தில் என்னால பேசவும் முடியாது… தமிழ்நாட்டுக்கு வந்த இத்தனை வருஷத்துல நீங்க மட்டுமல்ல….. நான் வேலை செஞ்ச எல்லா இடத்திலும் தெரியும்…. தகாத வார்த்தைகளை நான் பயன்படுத்துவதில்லை…  யாரும் குறை சொல்லி நான் பேசுவதும் இல்லை,  என்னை பற்றி எல்லாருக்கும் தெரியும்.

எனக்கு தமிழ் தெரியாதுன்னு வச்சுக்கோங்களேன்….  நீங்க எனக்கு விளக்கம் கொடுங்க….  சேரி என்றால் என்ன? அரசியலா நீங்க தான பண்ணுறீங்க.  பட்டியலின மக்கள் வாழக்கூடிய பகுதியாக மாற்றி…  அந்தப் பகுதியில் வாழும் மக்கள் நமக்கு சமமாக உட்காருவதற்கு தகுதி கிடையாதா ? நமக்கு சமமாக இருப்பதற்கு தகுதி கிடையா? நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என தெரிவித்தார்.