
மகாராஷ்டிராவில் உள்ள புனே நகரத்தில் உள்ள விஷ்ரம்பாக் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் கிளினிக்கில் 27 வயதுடைய இளம் பெண் ஒருவர் ரிசெப்ஷனிஸ்ட் வேலை செய்து வருகிறார். கடந்த ஜூலை 3ஆம் தேதி மாலை 7 மணியளவில் அதே கிளினிக்கில் 73 வயதுடைய ஒருவர் சிகிச்சைக்காக வந்திருந்த போது, அங்கு தனியாக இருந்த அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் படி, “முதியவர் அருகில் வந்து திடீரென அவரின் கன்னத்தில் கை வைத்து, “பப்பி தே (ஒரு முத்தம் கொடு)” என்று கூறியதுடன், தனது பாக்கெட்டை காட்டி, “என்னிடம் பணம் இருக்கு, உன்னை ஹோட்டலுக்கு கொண்டு போய் டின்னர் வைக்கிறேன். நீ வேண்டியது எல்லாம் தர்றேன், ஆனா நீ என்ன நான் சொல்றதெல்லாம் செய்யணும்” எனக் கூறி தகாத முறையில் பேசியுள்ளார்.
இந்த செயலில் அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக கிளினிக்கில் இருந்து ஓடிச்சென்று தற்காப்புக்காக வெளியே ஓடி சென்றார். அதற்குப் பிறகு அந்த முதியவர் அந்த பெண்ணைத் தொடர்ந்து சென்றபடி “நீ நாளைக்கு கிளினிக்கில் இருப்பியா?” என தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரை அடிப்படையாக கொண்டு, விஷ்ரம்பாக் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முதியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் “முதியவர் என்பதற்காக அவரின் தவறான செயலை பொறுத்துக் கொள்ள முடியாது. இது ஒரு மோசமான பாலியல் தொல்லை சம்பவம்” என பொது மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். போலீசார், குற்றவாளி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.