பெங்களூருவில் 9 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் மீது அளித்துள்ள சித்திரவதை புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு அனுராக் பாண்டே என்பவரை திருமணம் செய்த ஜோதி பாண்டே, முதல் நான்கு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அவர் முதல்முறை கர்ப்பமானபோது கணவரின் குணம் மாறத் தொடங்கியது.

மனைவி மீது தேவையற்ற சந்தேகங்களை வளர்த்துக்கொண்ட அனுராக், அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்த ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில், பிரசவத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார்.

குடும்ப நல மையங்களில் பேசித் தீர்க்க முயன்றும் பலன் கிடைக்காததால், மனமுடைந்த அந்தப் பெண் பெங்களூரு தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.