செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களை பொருத்தவரைக்கும் உங்க வேலைய நீங்க செய்யிறீங்க. என் வேலையை நான் செய்யுறேன். பர்சனனாலாக வீட்டுக்கு வன்மத்தை எடுத்துட்டு போல, பர்சனனாலாக  நீங்களும் வீட்டுக்கு வன்மத்தை எடுத்துட்டு போல… கண்டிப்பா நீங்களும் ஒத்துக்குவீ ங்க, நானும் ஒத்துக்குறேன். பர்சனனாலாக உங்களுக்கு தெரியும். ஒரு பிரஸ் மீட் முடிஞ்சபிறகு,  உங்களை சந்திச்சி… அன்பா பேசிட்டு… கைகுலுக்கி விட்டு போற ஆளு நானு.

அதே நேரத்துல இன்னைக்கு பிரஸ் மீட் இல்ல,  ஐயோ 4 மணி நேரமா நிக்கிறாங்க… மரியாதை கொடுத்து பேசணும் என எல்லா இடத்துலையுமே சொல்லுறேன்…  உதாரணத்துக்கு சென்னை ஏர்போர்ட்ல பேசிருப்பேன். தூத்துக்குடில  இறங்கி இருப்பேன். அண்ணா என்ன அண்ணா ? சென்னைல பேசிட்டிங்க…  நாங்களும் இருக்கோம். இப்படி நீங்க பேசாம போனா  ஆபீஸ்ல என்ன நினைப்பாங்க? உங்களுக்காக பேசிவிட்டு போற அரசியல்வாதி நான். உதாசீனபடுத்தகூடாது அப்படினு எல்லா இடத்துலையும் பேசுற ஆளு. கண்டிப்பா நண்பர் நீங்க தரம் பிரிச்சி பாப்பிங்க.

எந்த பத்திரிகையாளர்களையும் உதாசீனபடுத்தவில்லை. கருத்தை முன் வைக்கிறேன். நீங்க வைக்கிற கருத்துக்கு ஒரு கருத்து வைக்கிறேன். சில நேரத்துல நான் வைக்க கூடிய கருத்து வார்த்தைகள் கடினமா இருக்கலாம். அது ஸ்டராங்கா இருக்கலாம். அதுக்காக உங்களை அவமான படுத்துறோம்னு இல்ல, உங்களை மதிக்கிறதால தான் பதில் சொல்லுறேன். நான் உங்களை மதிக்கிறதால தான் நீங்க வைக்கிற கருத்துக்கு பதில் கருத்து வைக்கிறேன். இதுல நான் எங்கைமே சிறுமை படுத்தலைல என தெரிவித்தார்.