கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி பகுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு எதிராக சாலை மறியல் நடத்தி வருகின்றனர். சாலை பணி திட்டத்தை தொடங்கி வைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அதிமுக எம்எல்ஏ கே.பி முனுசாமி தன் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். அதாவது மத்திய அரசின் ஒரு திட்டத்திற்கு பூமி பூஜை நடத்தப்பட்ட நிலையில் அந்த திட்டத்தில் கலந்து கொள்வதற்கு அத்தொகுதி எம்எல்ஏவான கேபி முனுசாமி வந்துள்ளார்.

ஆனால் அவர் பூமி பூஜையில் கலந்து கொள்ள திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் தன் தொண்டர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அதாவது நிதி யாருடையதாக இருந்தாலும் அந்த தொகுதியின் பிரதிநிதி தான் என்பதால் தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என கருதி கேபி முனுசாமி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிந்துள்ளனர்.