தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ்,

நிரந்தரமான தீர்ப்பு எந்த கோட்டிலும் சொல்லவில்லை. எல்லாம் தற்காலிக தீர்ப்பாக இருக்கிறது. நாங்கள் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பில் செய்துள்ளோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த நோக்கத்திற்காக புரட்சித்தலைவர் உருவாக்கினார்களோ, அதே அடிப்படையில் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

நாங்களும் தொண்டர்கள் பக்கம் இருக்கின்றோம். எதிர்க்கட்சி சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவியே சட்டமன்ற வரலாற்றில் இல்லை என்று பிரஸ்மீட்டை கூப்பிட்டு சபாநாயகர் விளக்கம் கொடுத்தார்.  மறுபடி மறுபடி அதை என்கிட்ட கேட்டீர்கள் என்றால் ? இந்த பதவியே இல்லை என்று சொல்லிவிட்டார்.  எனக்கு முன்னாள் முதலமைச்சர் என்ற கேட்டகரியில் முன்னாடி சீட்டு கொடுத்து இருக்காரு.

தமிழக அரசியல் அதிமுக – திமுக  என்பது திமுக – பிஜேபி என மாறிவிட்டது என சொல்வதை வைத்து முடிவு சொல்லக்கூடாது.  தேர்தலில் மக்கள் தான் முடிவு எடுப்பார்கள்.எல்லா கட்சியிலும் பஞ்சாயத்து நடந்துகிட்டு தானே இருக்கு. எச்.ராஜா சொன்ன மாதிரி பஞ்சாயத்து எல்லாம் நாங்க பேசுனது இல்லை என தெரிவித்தார்.