ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் கணேஷ்ராஜ்-ஜானகி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணேஷ் ராஜ் ஸ்பின்னிங் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து நள்ளிரவு நேரத்தில் கணேஷ் ராஜ் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டினுள் நுழைந்ததும் தனது மனைவி ஜானகி தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கணேஷ் ராஜ் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஜானகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.