கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பணிக்கன்குடி என்னும் பகுதியில் சுபா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் அனீஸ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து விட்டார். அதன் பின் சுபா தனது 2 மகன்கள் மற்றும் தாயுடன் ஒரு ஓலை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் சுபாவின் வீட்டின் மேற்கூரையில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அந்தத் தீ வீடு முழுவதும் பரவிய நிலையில் வீட்டினூள் இருந்த சுபா, அவருடைய தாய் மற்றும் மகன்கள் அபினவ்,அபிநந்தன் ஆகியோர் தீ விபத்தில் சிக்கி உடல் கருகி நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தகவல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.