சென்னையில் கடந்த இரு தினங்களாக பார்முலா 4 கார்பந்தயம் நடைபெற்ற நிலையில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண்பதற்கு திரையுலக பிரபலங்கள் முதல் முக்கிய பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை ஹைதராபாத் அணியைச் சேர்ந்த அலிபாய் என்பவர் பெற்றுள்ளார்.

அதன்பிறகு இரண்டாம் பரிசை அகமதாபாத் அணியைச் சேர்ந்த திவிநந்தன் பிடித்துள்ளார். இதனையடுத்து மூன்றாவது இடத்தை பெங்களூர் அணியை சேர்ந்த ஜேடன் பாரியாட் பிடித்துள்ளார். இந்த வீரர்களுக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். மேலும் தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் கார் பந்தயம் நடைபெற்ற நிலையில் இனி இந்தியாவில் எந்த மாநிலத்தில் நடைபெற்றாலும் அதற்கு முன்னுதாரணமாக தமிழகம் விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.