இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த மாத சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை பிஎஃப்-காக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பிஎஃப் பணம் அவர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படுவதால் இது மிகவும் உதவியாக உள்ளது. இந்த பணத்திற்காக கிளைம் செய்யும் போது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது வழக்கம்தான்.

இந்த கோரிக்கைகள் எதனால் நிராகரிக்கப்படுகிறது என்று தெரியுமா KYC முழுமையடையாமல் அல்லது சரி பார்க்கப்படாமல் இருந்தால் நிராகரிக்கப்படலாம். அதுமட்டுமின்றி வங்கி விவரங்கள் முழுமை அடையாமல் அல்லது துல்லியமாக இல்லாமல் இருந்தாலும் நிராகரிக்கப்படலாம். உதாரணமாக கூட்டுக் கணக்கில், கணக்கு வைத்து இருப்பவர்களின் வங்கி அல்லது பிற விவரங்கள் பொருந்தவில்லை என்றாலும், வங்கி குறிப்பீடு பொருந்தவில்லை என்றாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.