வருமானவரித்துறை ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 ஆகிய படிவங்களை ஆன்லைனில் தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது. இதில் ஐடிஆர் 1 படிவத்தை தனி நபர் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு ஐடிஆர் 4 படிவத்தை 50 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தாக்கல் செய்கிறது. இந்நிலையில் ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 ஆகிய படிவங்களில் ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

அதற்கு முதலில் https://www.incometax.gov. in/iec/foportal/என்ற வருமான வரி இணையதளத்திற்குள் செல்ல வேண்டும். அதன் பிறகு பான் கார்டு எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும்.‌ அதில் e-file மெனுவை தேர்வு செய்து Income Tax Return என்பதை கிளிக் செய்து prepare and submit online என்பதை தேர்வு செய்ய வேண்டும். மேலும் ஐ டிஆர் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரத்தை பூர்த்தி செய்யவும் taxes paid and verification பகுதியில் உங்களுக்கான வெரிஃபிகேஷன் செய்து வருமான வரி தாக்கல் செய்து கொள்ளலாம்.