
குஜராத்தில் கங்கு தம்பாலா பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் வாலிபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த கடையின் உரிமையாளரும், அவருடன் இருந்தவர்களும் அந்த வாலிபரை அடித்து உதைத்து காரின் பானெட்டில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதனை அருகில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
போலீசார் கவனத்திற்கு சென்ற இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தி இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை ஒப்படைக்காமல் தங்களது கைகளில் சட்டத்தை எடுத்து கொடூரமான செயல்களில் ஈடுபடுவது பல நாடுகளில் நடக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.