கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது விருதாச்சலம் அருகே இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி. இவர் விருதாச்சலம் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவி பேருந்திற்காக கடைவீதியில் நின்று கொண்டிருந்தபோது கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவி மறுத்ததால் அருண்குமார் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து மாணவியின் தலையில் கிழித்துள்ளார்.

உடனே வலி  தாங்க முடியாமல் அலறிய மாணவியின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதற்குள் அருண்குமார் அவ்விடத்தை விட்டு தப்பி ஓடி சென்றார். இது குறித்து அறிந்த விருதாச்சலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தலைமறைவான அருண்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த விசாரணையில் மாணவியை கடந்த ஒரு வருடமாக அருண்குமார் பின் தொடர்ந்து வந்து காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. நடுரோட்டில் பள்ளி  மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.