இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. அதில் ஜப்பானில் உள்ள ஹீரோஷிமா நகரில் வீசப்பட்ட வெடிகுண்டின் காரணமாக 1,40,000 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து 3 நாட்களுக்குப் பிறகு ஜப்பானில் உள்ள நாகசாகி பகுதியில் அமெரிக்கா இரண்டாவது வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 2,00,000 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்புகளுக்கு பின் ஜப்பான், அமெரிக்காவிடம் சரணடைந்தது அதனால் இரண்டாம் உலகப் போர் நிறுத்தப்பட்டது. இந்தப் போரில் ஹிரோஷிமா, நாகசாயி பகுதிகளில் உயிர் பிழைத்தவர்கள் ஒன்றிணைந்து “நிஹான் ஹிடான்கியோ” என்ற இந்த அமைப்பை சுமார் பத்து ஆண்டுகள் கழித்து உருவாக்கினர்.

இந்த அமைப்பின் நோக்கம் உலகில் முழுவதுமாக வெடிகுண்டு தாக்குதலுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகும். சமீபத்தில் 2024 ஆம் ஆண்டின் அமைதி நோபல் பரிசு இந்த அமைப்பு பெற்றது. இந்த அமைப்பின் தலைவரான தோஷியுக்கி மிகாமிக்கி இஸ்ரேல், காசா போர் குறித்த கருத்து ஒன்றை தெரிவித்தார். அவர் கூறியதாவது, 80 வருடங்களுக்கு முன்பு இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் இருந்த நிலைமையைப் போன்றே தற்போது பாலஸ்தீனம் காசாவில் நிலை உருவாகி வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் 2400 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காசா உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்தியது. ஒரு வருடமாக நடந்த இந்த தாக்குதலில் சுமார் 42,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதில் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் அடிப்படை தேவைகள் கூட அங்குள்ள மக்களுக்கு மறுக்கப்படுகிறது. 80 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா, நாகசாயி மக்கள் அடைந்த துன்பத்தை காசா நகரில் உள்ள குழந்தைகள், பெண்கள் அனைவரும் அனுபவிக்கின்றனர். ஆனால் அணுகுண்டு ஆயுதங்களை பெருமையாக பறைசாற்றும் அதிகார வர்க்கத்துக்கு, பரிதாபமான இந்த மக்களின் குரல் கேட்காது என்பதே வருந்தத்தக்க உண்மையாகும். இவ்வாறு தோஷியுக்கி மிகாமிக்கி தெரிவித்தார். இவரது கருத்துக்கு இஸ்ரேல் அரசு கண்டனம் தெரிவித்தது. ஆனால் மக்கள் பலரும் இவரது கருத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர்.