
இந்தி நடிகர்கள் ஒரு படத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்த செய்தியாகும். மேலும் படங்களின் லாபத்திலும் பங்கு கேட்கிறார்கள். இதனையடுத்து தமிழ்,தெலுங்கு நடிகர்களின் சம்பளமும் உயர்ந்து உள்ளது.
அதிலும் 2 அல்லது 3 மாதங்கள்தான் கால்ஷீட் கொடுக்கிறார்கள். அந்த வகையில் இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் 2011- ஆம் ஆண்டில் “பியார் கா புஞ்சனாமா” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ஒரு படத்தில் வெறும் 10 நாட்கள் மட்டுமே நடிப்பதற்கு ரூ.20 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கார்த்திக் ஆர்யன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, ”நான் நடித்த ஒரு படத்துக்கு ரூ.20 கோடி சம்பளம் வாங்கியது உண்மைதான். அந்த படத்தை 10 நாட்களில் முடித்து விட்டதால், தயாரிப்பாளருக்கு அதிக லாபம் கிடைத்தது. எனவே அதில் நடிப்பதற்காக ரூ.20 கோடி சம்பளம் வாங்கியது ஒன்றும் தவறு இல்லை” என்றார். இவர் தற்போது அனுராக் இயக்கத்தில் ஆஷிக்கி 3 மற்றும் ஷெகஜாதா ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.