நியூசிலாந்தின் ஆக்லாந்தில் (Auckland), ஃபாஸ்ட் ஃபேஷன் (Fast Fashion) பற்றிய செய்தியைப் பதிவு செய்துகொண்டிருந்த முன்னாள் மிஸ் வேர்ல்ட் நியூசிலாந்து மற்றும் செய்தியாளரான ஜெசிகா டைசன் (Jessica Tyson), எதிர்பாராத விதமாக ஒரு கடற்பறவையால் (Seagull) முகத்தில் தாக்கப்பட்டார். பலத்தக் காற்று வீசியபோது, பறவை இவரின் முகத்தில் வந்து மோதியது.

பறவை தாக்கியதில் அதிர்ச்சி அடைந்து முகத்தைப் பிடித்த நிருபர் டைசனைப் பார்த்த சக ஊழியர், “உனக்கு ரத்தம் வருது!” என்று எச்சரித்தார்.

 

View this post on Instagram

 

A post shared by JESS TYSON 🐬 (@jessicatyson08)

கடற்பறவையின் அலகோ அல்லது நகமோ மோதியதால், அவரது இடது கண்ணின் புருவத்திற்கு மேலே ஆழமற்ற வெட்டுக் காயத்துடன் ரத்தம் வழிந்தது.

இருந்தபோதும், டைசன் உடனடியாக அருகிலிருந்த அலுவலகத்தில் காயத்தைச் சுத்தம் செய்துகொண்டு, “வேலையின் மீதான அர்ப்பணிப்பு உண்மையானது!” என்று நகைச்சுவையுடன் தெரிவித்து, பணியைத் தொடர்ந்தார்.