மும்பையின் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மாலில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் மாலின் வழித்தடங்களில் சிறுத்தை நடமாடி, அங்கு இருந்தோர் அதிர்ச்சியுடன் பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் மும்பை மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.
https://www.instagram.com/reel/DP1K2EQjJqm/?igsh=MXUyMWx6NHY2Mm44OQ==
ஆனால், வனத்துறையும் டிஜிட்டல் மீடியா நிபுணர்களும் தெரிவித்ததாவது, இது உண்மையான சிறுத்தை அல்ல, ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காட்சி தான் எனும். “டீப்ஃபேக்” என்ற தொழில்நுட்பம் மூலம் நம்பவைக்கும் விதத்தில் இந்த காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒளி-நிழல் அமைப்பு இயல்பாக இருப்பதால் பலர் உண்மையென நம்பி பரப்பியுள்ளனர்.
இதேபோன்று, சமீபத்தில் சிறுத்தை நகருக்குள் வந்ததாக கூறி பல போலி வீடியோக்கள் பரவியிருந்தன. பின்னர் அவை அனைத்தும் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டவை என உறுதி செய்யப்பட்டது. நிபுணர்கள் கூறுவதாவது, “இத்தகைய போலி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அச்சத்தை கிளப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகின்றன. மக்கள் இதை பகிரும் முன் நம்பகமான ஆதாரத்தை சரிபார்க்க வேண்டும்” என எச்சரித்துள்ளனர்.
