கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி குறித்தான ஊழல்களை பட்டியலிட்டு பேசி விமர்சனம் செய்தார்.   பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டை முன்வைத்து  நான்கு – ஐந்து நாட்கள் கூட ஆகாத நிலையில்,

நேற்று மகராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 30 எம் எல் ஏக்கள் அஜித் பவர் தலைமையில் ஆளும்  ஏக்நாத் ஷிண்டே – பாஜக தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்தார். அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, பின்னர் தலைவராக தொடரும் சரத்பவார், கட்சியில் செயல் தலைவராக  ஸ்ரீமதி சுப்ரியா சுலே மற்றும் அஜித்பவார் உள்ளிட்டவர்களை நியமனம் செய்தார். இதனால் அதிருப்தி அடைந்த அஜித்பவார் கட்சியை இரண்டாக உடைத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், ஸ்ரீமதி சுப்ரியா சுலே மகாராஷ்டிராவின் எதிர்காலமாக இருக்கப் போகிறார். சந்தேகமில்லை. அவர் படித்தவராக வருகிறார், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரை என்னால் பார்க்க முடிகிறது, அவர் கண்டிப்பாக மகாராஷ்டிரத்தில் முன்னேற்றத்தை கொண்டு வருவார்.

அவர் தைரியமாகவும் அமைதியாகவும் இருக்கிறார். இது ஒரு தலைமைத்துவ குணத்திற்கு நல்லது. பெண்கள் ஆட்சி செய்ய வேண்டும். இது எனது தனிப்பட்ட பார்வை. சுப்ரியா சுலே மகாராஷ்டிராவின் எதிர்காலம் என்னால் அதை கணிக்க முடியும். ஈகோ காரணமாக பெண்களுக்கு கீழ் வேலை செய்ய கடினமாக இருக்கும் ஆண்கள் ஒரு மாநிலத்தையோ அல்லது நாட்டையோ ஆள முடியாது. பெண்களை இழிவாகப் பார்ப்பதும், அவர்களால் சாதிக்க முடியாது என்று நினைப்பதும் தவறான கணக்கு. நான் ஸ்ரீமதி சுப்ரியா சுலேவை ஆதரிக்கிறேன் என தெரிவித்தார் .