தமிழகத்தில் உள்ள நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஹெலிபேடுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இதை பயன்படுத்துவதற்கு அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை இந்திய தொழில்நுட்ப நிறுவனமான டிட்கோ உருவாக்கியுள்ளது.

அதன்படி மத்திய சிவில் விமான போக்குவரத்து கொள்கையை பயன்படுத்தி தமிழகத்தில் ஹெலிகாப்டர் சேவையை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக தற்போது தமிழகத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கு விரைவில் ஹெலிகாப்டர் சேவை அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவசர காலங்களில் ஹெலிகாப்டர் சேவையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.