டெல்லியை ஒட்டியுள்ள குருகிராமில் திங்கட்கிழமை முன்பே இல்லாத அளவுக்கு மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கியமாக தேசிய நெடுஞ்சாலை-48 பகுதியில், 7 முதல் 8 கிலோமீட்டர் வரையிலான வாகனங்கள் வரிசையாக நிற்கின்றது. மக்கள் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்ப முடியாமல், கார்கள், ஆட்டோக்கள், டாக்ஸிகளில் மணிக்கணக்கில் சிக்கிக் கொண்டனர். நர்சிங்க்பூர் உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கிய நிலையில், போக்குவரத்து தடங்கல்கள் அதிகரித்தன.

 

இந்த நிலையில், ஒரு டாக்ஸி டிரைவர் மற்றும் ஒரு பெண் சமூக சேவகி குறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சமூக சேவகி தீபிகா நாராயண் பரத்வாஜ், 6 மணி நேரம் நெரிசலில் சிக்கிய போது தனது டாக்ஸி ஓட்டுநர் எந்த முறையிலும் எரிச்சலடையாமல், அமைதியாக கையாள்ததாக புகழ்ந்து தெரிவித்துள்ளார். “அவர் என்னிடம் ஒரு முறையும் புலம்பவில்லை. அவர் மிகுந்த பொறுப்புடன் நடந்தார்” என அவர் கூறியுள்ளார். இதனைப் பார்த்த பலர் அந்த டிரைவரின் பொறுமையை பாராட்டி வருகின்றனர்.

குருகிராமில் உள்ள பல்வேறு பன்னாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் லட்சக்கணக்கான மக்கள், தினமும் டெல்லியிலிருந்து இங்கு பயணிக்கின்றனர். இந்த போக்குவரத்து நெரிசல், மக்களின் தினசரி வாழ்வை பெரிதும் பாதித்தது. தற்போது நிலைமை சாதாரணமாகி வருவதுடன், அதிகாரிகள் வருங்காலத்தில் இதுபோன்ற நெரிசல்களை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.