“ஒரு டாலருக்கு தலை மசாஜ்” என்ற பெயரில் இந்திய தாத்தா ஒருவர் செய்யும் தலை மசாஜ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை செய்வதன் மூலம் தலைவலியை போக்கி, மனநிலை புத்துணர்ச்சியான மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. பிரபலமான கடைகளில் தலை மசாஜ்க்கு என்று தனி கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் வெளிநாடுகளில் தலை மசாஜ் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்தியாவில் வயதான சவர தொழிலாளி ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டைலாக மசாஜ் செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலானது.

இதனைப் பார்த்த வெளிநாட்டவர் ஒருவரை கவர்ந்துள்ளது. அதற்கு அவர் 80 ரூபாய் கட்டணம் வசூலிப்பதை அறிந்த வெளிநாட்டவர் ஆச்சரியமடைந்தார். ஏனெனில் அவரது நாட்டில் ஒரு தலை மசாஜ்க்கு 30 டாலர் முதல் 60 டாலர் என்று வசூலிப்பார்கள். இது இந்திய மதிப்பு படி 2500 முதல் 5000 வரை ஆகும். எனவே அந்த வெளிநாட்டவர் ஒரு டாலருக்கு தலை மசாஜ் என்ற தலைப்பில் இந்திய தாத்தாவின் வீடியோவை வெளியிட்டார். இறுதியாக அவர் காது, நெற்றி, புருவம் மற்றும் கண் இமை பகுதியிலும் மசாஜ் செய்து புத்துணர்ச்சி அளிக்கிறார். மேலும் தாத்தா எங்கிருக்கிறார் என்பது பற்றிய விபரங்கள் காணப்படவில்லை.