
பகுஜன் சாமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்து ஜூலை மாதம் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். நகரின் முக்கிய பகுதியில் இந்த படுகொலை நடைபெற்றதால் சட்ட ஒழுங்கு குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனால் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்திப்பாய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய காவல் ஆணையராக அருண் என்பவர் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற பிறகு 3 என்கவுண்டர் நடந்துள்ளது. அதாவது கொலை வழக்கில் கைதான திருவேங்கடம், ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, மற்றும் இன்று சீசிங் ராஜா என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் பதக்கி வைத்திருந்த ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ய அழைத்துச் செல்லும் போது தப்பி செல்ல முயன்றுள்ளார். அப்போது காவல்துறை தரப்பில் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் அவரின் வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது. இது காவல் ஆணையர் அருணின் மூன்றாவது என்கவுண்டர் என குறிப்பிடப்படுகிறது.