
தமிழ் சினிமாவில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மகிழ்திருமேனி. இந்த படத்திற்கு பிறகு தடையற தாக்க, மீகாமன் மற்றும் கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது மகிழ்திருமேனி ஏகே 62 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதனால் மகிழ்திருமேனி குறித்த செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் மகிழ்திருமேனி முன்பு ஒரு ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அவர் கூறியதாவது, நான் கௌதம் மேனனின் மின்னலே திரைப்படத்தை பார்த்த பிறகு என்னுள் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டது.
அந்த படத்திற்குப் பிறகு நான் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசைப்பட்டு அதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டேன். நான் உங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரியலாமா என கௌதம் மேனனிடம் கேட்டபோது அவர் உடனே ஒப்புக்கொண்டார். ஒருமுறை நான் அவரிடம் என் நண்பர்களுடன் வெளியே செல்ல வேண்டும் பணம் வேண்டும் என கேட்டேன். நான் கேட்ட பணத்தை விட பல மடங்கு பணத்தை கௌதம் மேனன் எனக்கு கொடுத்தார். அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவருடன் பணிபுரிந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார். மேலும் மகிழ் திருமேனி என இயக்குனர் செல்வராகவனிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.