நாட்டின் மிகப்பெரிய வங்கியான எச்டிஎப்சி வங்கி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்காக Vishesh ஏன்டா திட்டத்தை நேற்று அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் சுமார் ஒரு லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மட்டும் 675 கிளைகளை உருவாக்கும் செய்யவும் மொத்த 5000 கிளைகளை கொண்டு இயங்கவும் எச்டிஎப்சி வங்கி திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே உயர் மட்ட வாடிக்கையாளர்களுக்காக கிளாசிக் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன் பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள விசேஷ் திட்டத்தின் மூலமாக தங்க கடலில் 50 சதவீதம் வரை தள்ளுபடி, கட்டுமான உபகரணங்கள், டிராக்டர்கள், தனிநபர், வணிகம், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி ஆகிய அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளதாக hdfc வங்கி தெரிவித்துள்ளது.