கடன்களுக்கான வட்டி விகிதங்களை பாரத ஸ்டேட் வங்கி அதிகரித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.1% ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வங்கி வழங்கியுள்ள நிதி அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதங்கள் தவணை காலங்களின் அடிப்படையில் 10 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் இந்த புதிய விகிதம் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் வங்கிகள் கடன் வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பாரத ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.