நாடு முழுவதும் கல்வி, பணிபுரியும் இடங்களில் மகளிருக்கு மாதவிடாய் கால விடுமுறை அளிக்க கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை கவனத்தில் கொண்டு விடுமுறை அளிப்பதற்கான விதிமுறைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனவை விசாரணை செய்த தலைமை நீதிபதி இன்று ஒப்புக்கொண்டுள்ளார். அந்த மனுவில் இங்கிலாந்து, சீனா, ஜப்பான், தைவான், இந்தோனேசியா, தென்கரியா போன்ற நாடுகளில் மாதவிடாய் கால விடுமுறை வழங்கப்படுகின்றது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் வருகின்ற 24 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.