மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசி உள்ளார். அதில் 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் மூலதன செலவு 33 சதவீதம் அதிகரித்து பத்து லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். கடைசியாக மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக பொது மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய பட்ஜெட்டில் உண்மையான கவனம் அதற்காக செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டால் பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் கூறியுள்ளார். மேலும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்தி வருவதாகவும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு  திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறி வருவதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.