தமிழ் சினிமாவில் 90’களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சங்கவி. இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான நடிகர் அஜித்தின் முதல் படமான அமராவதி என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து நடிகர் விஜயுடன் சேர்ந்து கோயம்புத்தூர் மாப்பிள்ளை மற்றும் ரசிகன் போன்று அடுத்தடுத்து 4 படங்களில் நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களில் 90 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தமிழில் அஜித், விஜய், சரத்குமார், பிரபு, பிரசாந்த் மற்றும் ராம்கி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த சங்கவி கடந்த 2016-ம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.
இந்த தம்பதிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சங்கவி அடிக்கடி தன்னுடைய குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது தன்னுடைய மகளின் அழகிய வீடியோ ஒன்றினை சங்கவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
View this post on Instagram