தமிழகத்தில் இந்த வாரத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு விடுமுறை வந்த நிலையில் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 தினங்கள் விடுமுறை வந்துள்ளது. இதேபோன்று 3 நாள் தொடர் விடுமுறை அடுத்த வாரமும் வருகிறது. அதாவது வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசு விடுமுறை வழங்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு என இரு தினங்கள் விடுமுறை. எனவே இந்த வாரத்தை போன்று அடுத்த வாரத்திலும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை இருக்கிறது. மேலும் விடுமுறை குறித்த அறிவிப்பு மாணவ-மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.