இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் போக்குவரத்தையே விரும்புவார்கள். தற்போது கோடை விடுமுறை வருவதால் ரயிலில் சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் நிரம்பி வழியும். இதன் காரணமாக தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கோடை விடுமுறையை முன்னிட்டு 217 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில்கள் மொத்தம் 4010 பயணங்களை மேற்கொள்ளும். இந்த அறிவிப்பின்படி வடமேற்கு ரயில்வே 16 ரயில்களையும், மத்திய ரயில்வே மண்டலங்கள் தலா 10 சிறப்பு ரயில்களையும், தெற்கு ரயில்வே 20 சிறப்பு ரயில்களையும், மேற்கு ரயில்வே 40 சிறப்பு ரயில்களையும், தெற்கு மத்திய ரயில்வே 48 சிறப்பு ரயில்களையும், தென்மேற்கு ரயில்வே 69 சிறப்பு ரயில்களையும் இயக்கும். மேலும் இந்த அறிவிப்பு தற்போது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.