இந்திய தபால் நிலையங்களில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது‌. தற்போது ஏப்ரல் ஜூன் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள புதிய வட்டி விகிதங்களை பார்க்கலாம்.

அதன்படி சேமிப்பு டெபாசிட் கணக்குகளுக்கு 4 சதவீதமும், 1 ஆண்டு டைம் டெபாசிட் திட்டங்களுக்கு 6.8 சதவீதமும், 2 ஆண்டு டைம் டெபாசிட் திட்டங்களுக்கு 6.9%, 3 ஆண்டு டைம் டெபாசிட் திட்டங்களுக்கு 7%, 5 ஆண்டு டைம் டெபாசிட் திட்டங்களுக்கு 7.5%, 5 ஆண்டு தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு 6.2%, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்களுக்கு 8.2%, மாத வருமான திட்டங்களுக்கு 7.4%, தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டங்களுக்கு 7.7%, பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்களுக்கு 7.1%, கிஷான் விகாஸ் பத்திரம் திட்டங்களுக்கு 7.5%, செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 8 சதவீதமும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சேமிப்பு டெபாசிட் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் போன்றவைகளுக்கு மட்டும் வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.