நாடு முழுவதும் சாலை விபத்துகளை குறைப்பதற்கு போக்குவரத்து விதிகள் தற்போது கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சண்டிகர் மாநிலத்தில் இயங்கி வரும் பொது சேவை வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் கண்காணிப்பு சாதனங்கள் நிறுவ வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு இன்று  ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அபராதம்  விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சுமார் 5 ஆயிரத்து 500 பொது சேவை வாகனங்கள், மோட்டார் வண்டிகள் மற்றும் பேருந்துகள் இயங்கி வருகின்றன. அதில் 2100 பேர் மட்டுமே பாதுகாப்பு சாதனங்களை பொருத்தியுள்ளனர். கடந்த வருடம் மாநில போக்குவரத்து ஆணையம் ஜூன் 30 முதல் வாகன இருப்பிட கண்காணிப்பு மற்றும் அவசர எச்சரிக்கை திட்டத்தை செயல்படுத்த தொடங்கிய நிலையில் தற்போது இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.