இந்தியாவில் சமீப காலமாக பல்வேறு வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பொதுத்துறை வகையான பேங்க் ஆப் பரோடா வங்கியும் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

அதன்படி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட பைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகித உயர்வின் படி பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீத வட்டி கிடைக்கும். அதன்பிறகு சீனியர் சிட்டிசன்களுக்கு 7.75 சதவீத வட்டி கிடைக்கும். மேலும் உயர்த்தப்பட்ட இந்த புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அதாவது மே 12-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.