இந்தியாவில் அதிக பென்ஷன் பெற விரும்பும் ஊழியர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த வருடம் நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்துடன் சேர்ந்து அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. இதற்கான கால அவகாசம் முன்னதாக மே 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

இந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில், பின்னர் ஜூன் 26-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைத்தால் எவ்வளவு கிடைக்கும் என்ற விவரம் இதுவரை தெரியாமல் இருந்தது. ஊழியர்கள் விண்ணப்பித்த பிறகு மண்டல அலுவலரே ஊதிய தொகையை நிர்ணயம் செய்வார். எவ்வளவு தொகை நிர்ணயிக்கப்பட்டாலும் அது குறித்த தகவல் வட்டியுடன் சேர்த்து பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பணத்தை டெபாசிட் செய்யவும், நிதி பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கவும் மூன்று மாதங்கள் வரை கால அவகாசம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.