தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழிலதிபர் சோகைல் கதுரியா என்பவரை சென்ற டிச,.4 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையிலுள்ள முண்டோடா கோட்டையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவின் திருமணம் “லவ் ஷாதி டிராமா” எனும் தலைப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. இதை ஹன்சிகா தன் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.