பிரபல தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் “வாத்தி”. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் சார் எனவும் தமிழில் வாத்தி எனவும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தனுஷின் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அதோடு விரைவில் அப்டேட்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டுமாக சன்பிக்சர்ஸ் உடன் இணைந்துள்ளார் தனுஷ்.