செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  ஹமாஸ்  பிரச்சனையில் கூட நம்முடைய பாரத பிரதமர் தலையிட்டு,  அதை சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்று உலகத் தலைவர்கள் வேண்டுகிறார்கள். அப்படி உலக தலைவர்களில் ஒருவராக இருக்கக்கூடிய மோடி 2024லே பாரத பிரதமராக வந்தால்,  இந்திய நாடு மிகப்பெரிய வளர்ச்சியே அடையும்…. இந்திய நாடுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு….  இந்திய நாட்டிலே ராணுவ தளவாடங்கள் வலுவோடு கட்டமைத்திருக்கிறார்கள்….

பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்திருக்கிறார்கள்….  இப்போது கூட தேர்தல் அறிக்கையில் நம்முடைய பாரதிய ஜனதா அறிவித்திருக்கிறார்கள்…. வறுமை கோட்டிற்கு போகின்ற மக்கள் யார் என்று சொன்னால் தொழிலாளர் வர்க்கங்கள் தான்….  அந்த தொழிலாளர்கள் வர்க்கங்கள் டாஸ்மார்க் கடைகள் மூலமாக குடித்து குடித்து குடும்பம் வீணாகிக் கொண்டிருக்கிறது.

பல குடும்பங்கள் தற்கொலை செய்யப்படுகிறது. கடன் தொழில் மாட்டிக்கொள்கிறார்கள். அன்றாடம்  மகளிர் அழுது கொண்டிருக்கிறார்கள். அந்த கடையை விரைவிலே மூடுவோம்…..  இந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு என்று நம்முடைய தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருக்க கூடிய ஒரு நாடு என்று சொன்னால்,  அது இந்திய நாடு தான் என பேசினார்.